இஸ்ரேல் கால்பந்து அணிகளுக்கு தடை விதிக்க பாலிஸ்தீனம் கோரிக்கை

சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனும் தமது பிரச்சாரத்தை நிறுத்தப் போவதில்லை என்று பாலஸ்தீன கால...

சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் பங்கேற்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனும் தமது பிரச்சாரத்தை நிறுத்தப் போவதில்லை என்று பாலஸ்தீன காலபந்து அதிகாரிகள், சர்வதேசக் கால்பந்து விளையாட்டு சம்மேளனத்தின் தலைவரிடம் தெரிவித்துள்ளனர்.இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் கால்பந்து விளையாட்டிலும் நுழைந்துள்ளது

தமது நாட்டு கால்பந்து அணியை மேற்கு கரைக்கும், காசா நிலப்பரப்புக்கும் இடையே பயணிப்பதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளத்தை அடுத்து இஸ்ரேல் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் பாலஸ்தீனம் கோருகிறது.

சர்வதேசக் கால்பந்து விளையாட்டுச் சம்மேளனமான ஃபிஃபாவின் பொதுக்குழு கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையிலேயே பாலஸ்தீனத்தின் இந்தக் கோரிக்கை வந்துள்ளது.

ஃபிஃபாவின் பொதுக்குழு கூட்டத்தில் சரவதேசப் போட்டிகளில் இஸ்ரேல் பங்கேற்பதற்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிப்பார்களேயானால், இஸ்ரேலிலுள்ள கால்பந்து அணிகளும், தேசிய அணியும் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்படும்

இதேவேளை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவை சந்தித்த பிறகு, ஃபிஃபாவின் தலைவர் செப் பிளாட்டர் ரமல்லாவில் பாலஸ்தீன பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.

Related

விளையாட்டு 1417883285523927349

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item