சிறிலங்கா செல்வந்தர்களை அச்சுறுத்திய கொள்ளைக் கும்பல்
சிறிலங்காவின் பல பகுதிகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். 23 பேரை கொண்ட கொள்ளை கும்ப...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_323.html
23 பேரை கொண்ட கொள்ளை கும்பலை பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த குழுவினர், செல்வந்தவர்களின் வீடுகளில் ஆயுதங்களுடன் புகுந்து மிரட்டி, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
மாணிக்கக்கல் வர்த்தகர்கள் உட்பட செல்வந்தர்களின் வீடுகளில் கடந்த ஆறுமாதங்களாக தங்களுடைய கைவரிசையை காண்பித்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பலாங்கொட போவத்தையில் உள்ள மாணிக்கக்கல் வர்த்தகரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்த தகவல் பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோனுக்கு கிடைத்ததை அடுத்து அவை தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வாவின் ஒருங்கிணைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

