கொழும்பில் வாழ்பவர்களுக்கு அபாய எச்சரிக்கை!
சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால் பங்கஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் நிலவும் வெப்...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_424.html
தற்சமயம் நிலவும் வெப்பம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பங்கஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசல் மிகுந்த நகரங்களில் இந்த நோய் ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் பொருட்டு பொருத்தமான ஆடைகளை பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் அவதானமாக இருக்கும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பண்டிக்கைக் காலமென்பதால் சனநெரிசல் அதிகமாக இருக்கும். இதன்காரணமாக நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

