இனவெறி தாக்குதல்…மூன்று இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்ற நபருக்கு மரண தண்டனை? (வீடியோ இணைப்பு)
அமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக்கொன்ற நபருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் Nor...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_386.html
அமெரிக்காவின் North Carolina சேப்பல் ஹில்ஸ்(Chapel Hills) பகுதியில் ஸ்டீபன் ஹிக்ஸ்(Stephen Hicks Age-46) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.
அதே குடியிறுப்பில் டியா ஷேடி பராக்கத்(Deah Shaddy Barakat Age-23), அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா(Yusor Mohammad Age-21) மற்றும் சகோதரி யூசுரின் ரஸான் அபுசல்ஹா(Razan Mohammad Abu-Salha Age-19) என்ற இஸ்லாமிய மாணவர்களும் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி ஸ்டீபன் ஹிக்ஸிற்கும், மூன்று மாணவர்களுக்கும் இடையே கார் பார்க்கிங் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ஹிக்ஸ் தனது துப்பாக்கியை எடுத்து மூன்று மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாத்திகவாதியான இவர், இஸ்லாமியர்களை பிடிக்காததால் இந்த கொலையை செய்ததாக பலியானவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று இந்த வழக்கு North Carolina நீதிமன்றத்திற்கு வந்தபோது, குற்றவாளியின் மனைவியான Karen, கார் பார்க்கிங் தகராறால் மட்டுமே இந்த கொலை நடந்தது என்றும் இன வெறுப்பால் இது நடைபெறவில்லை என மறுத்துள்ளார்.
ஆனால் பலியான மாணவர்களின் பெற்றோர்கள், இது முழுக்க முழுக்க திட்டமிட்ட இனவெறுப்பால் நடைபெற்ற கொலை என்றும், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் கூறினர்.
வழக்கை விசாரணை செய்த நீதிபதி Orlando Hudson, இருதரப்பு வாதங்களையும் எடுத்துக்கொள்வதாகவும், பலியானவர்களின் பெற்றோர்கள் கூறும் ‘மதவெறுப்பு’ விவகாரத்தை முக்கியத்துவமாக கருதுவதாக தெரிவித்தார்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு நிச்சயம் மரண தண்டனை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

