இலங்கை அணிக்கு கைகொடுக்கும் சங்கக்காரா
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் திறமை உலகக்கிண்ணப் போட்டிகளில் அந்த அணிக்கு கைகொடுக்கும் என விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_18.html
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காராவின் திறமை உலகக்கிண்ணப் போட்டிகளில் அந்த அணிக்கு கைகொடுக்கும் என விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.
சமீபத்திய அடுத்தடுத்த தோல்விகளால் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு தயாராவதில் இலங்கை அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இலங்கை அணியை தயார் செய்வதில் முழு மகிழ்ச்சி இல்லை என தெரிவு குழு தலைவர் சனத் ஜெயசூரியாவும் கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இலங்கை அணிக்கு சங்கக்காரா ஊக்கமளிப்பார் என்று முன்னாள் மேற்கிந்திய தீவுகள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இது தொடர்பாக கூறுகையில், சங்கக்காரா தனது கடைசி உலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ளார்.
கடந்த சில வருடங்களாக எந்தவொரு துடுப்பாட்டக்காரரும் சிறந்த ஒரு கிரிக்கெட்டை விளையாடவில்லை. ஆனால் சங்கக்காரா டெஸ்ட் போட்டியில் மட்டுமின்றி ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
சங்கக்காராவின் இந்த திறமை மற்றும் அனுபவம் உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணிக்கு ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

