6000 கோடி ரூாவுக்கு ரொனாட்டோவை வாங்கிய கழகம்
உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை ஆறாயிரம் கோடி ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்...
https://kandyskynews.blogspot.com/2015/02/6000.html
உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் விலை ஆறாயிரம் கோடி ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினை சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009ம் ஆண்டு முதல் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.
இந்த அணிக்காக ரொனால்டோவுக்கு ஆறாயிரம் கோடி ரூபா விலை நிர்ணயித்துள்ளதாக அவரது ஏஜண்ட் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கால்பந்து உலகின் தலைசிறந்த வீரரான ரொனால்டோவை எந்த ஒரு கால்பந்து வீரருடன் ஒப்பிட முடியாது.
அவரை ஒப்பந்தம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் . ஆனால் ஆறாயிரம் கோடி கொடுத்தாலும் ரொனால்டோவை ரியல் மாட்ரிட் அணி விடுவிக்காது என்று தெரிவித்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதினை மூன்று முறை ரொனால்டோ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

