கோல்டன் கீ வழக்குகள் நிறைவு
வைப்பாளர்களுக்கு 41 வீத பணத்தை மீளளிக்க உத்தரவு கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு அவர்களின் வைப்புத் தொகையில் 41 வீதத்தை திருப்பிச் செலுத்து...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_5.html
வைப்பாளர்களுக்கு 41 வீத பணத்தை மீளளிக்க உத்தரவு
கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு அவர்களின் வைப்புத் தொகையில் 41 வீதத்தை திருப்பிச் செலுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த உயர் நீதிமன்றம் இதுவரை தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும் நேற்று தீர்மானித்தது.
கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு அவர்களின் வைப்புத் தொகையில் 41 வீதத்தை திருப்பிச் செலுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த உயர் நீதிமன்றம் இதுவரை தொடர்ந்து வந்த நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவும் நேற்று தீர்மானித்தது.
அதன் படி செலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலயின் கோல்டன் கீ வைப்புகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சகல வழக்குகளையும் நிறைவுக்கு கொண்டுவருவதாக பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐந்து நீதியரசர்கள் கொண்ட குழு, நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்.
அரசாங்கம் உயர் நீதிமன்றில் முன் வைத்த கோல்டன் கீ வைப்பாளர்களின் வைப்புக்களை மீள செலுத்தும் திட்டத்துக்கு, முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் என எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத நிலையில் அந்த திட்டத்தை அங்கீகரிப்பதாகவும் அதன்படி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவுறுத்தப்படுவதாகவும் மன்று அறிவித்தது.
அதன் பிரகாரமே கடந்த 6 வருடங்களாக தொடர்ந்த வழக்கு நேற்றோடு நிறைவுக்கு வந்தது.
முன்னதாக கோல்டன் கீ வைப்பாளர்களுக்கு வைப்புக்களை மீளச் செலுத்தும் அரசாங்கத்தின் திட்டம் கடந்த மாதம் ஆரம்பமானது.
இலங்கையில் இடம்பெற்ற பாரிய மோசடியாக கருதப்படும் கோல்டன் கீ நிதி மோசடி காரணமாக அழுத்தங்களுக்கும் மனச் சோர்வுக்கும் உள்ளான 26 பேர் தற்கொலை மற்றும் வேறு நோய்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கோல்டன் கீ நிறுவனத்தில் 9056 வைப்பாளர்கள் வைப்புக்களை இட்டுள்ள நிலையில் அதன் மொத்த பெறுமதி 26,500 மில்லியன் ரூபா என கணிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரூபா முதல் 2000 இலட்சம் ரூபா வரையிலான வைப்புக்கள் அதில் அடங்குகின்றன.
இந் நிலையிலேயே கோல்டன் கீ வைப்பாளர்கள் மூவர் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த நிலையில் அவை மூன்றும் அனைத்து வைப்பாளர்கள் சார்பிலுமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
அரசாங்கம் வைப்பாளர்களின் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்த நிலையிலேயே அந்த வைப்பு தொடர்பிலான அனைத்து வழக்குகளையும் முடிவுறுத்த மன்று நேற்று தீர்மானித்தது.