மஹிந்தவை மட்டுமல்ல; மைத்திரி அரசையும் வீழ்த்துவதே எமது மிகப்பெரிய இலக்கு: JVP

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கிவிட்டார். மஹிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டு மைத...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கிவிட்டார். மஹிந்தவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொண்டு மைத்திரியின் உண்மை முகத்தை வெளிப்படுத்திவிட்டார் என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியது. மஹிந்தவை மட்டும் அல்ல மைத்திரி அரசாங்கத்தையும் வீழ்த்துவதே எமது இலக்காகும் எனவும் ஜே.வி.பி குறிப்பிட்டது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் வினவியபோதே மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மக்களின் அர்ப்பணிப்பு அனைத்தையும் சிதைவடையச் செய்யும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டில் மூவின மக்களும் மைத்திரியை ஆதரித்தமையும் அவரை வெற்றிபெறச் செய்ததன் நோக்கத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறந்து விட்டார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நாட்டில் மிகவும் மோசமான அடக்குமுறை ஆட்சியே நடைபெற்றது. இராணுவ ஆக்கிரமிப்பின் உச்சகட்ட அராஜகத்தை மஹிந்த அரசாங்கம் கையாண்டுவந்தது.

பொருளாதார ரீதியிலும் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் முழுமையான ஊழல் செயற்பாடுகளை தான் மஹிந்தவின் குடும்ப அரசாங்கம் மேற்கொண்டது. இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறி ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியவுடன் இந்த நாட்டில் அனைத்து மக்களும் மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்தனர். இந்த நாட்டில் ஜனநாயகம் தலைதூக்கும் என்ற நம்பிக்கையில் மைத்திரியை ஆதரித்தனர்.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதான முழுமையான நம்பிக்கையில் மக்கள் செயற்பட வேண்டாம் என நாம் ஆரம்பத்தில் இருந்தே தெரிவித்திருந்தோம். சுயநல அரசியலுக்காக இவர்கள் மக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிவார்கள் என எச்சரித்திருந்தோம். நாம் தெரிவித்ததைப்போல் இன்று நடந்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன தனது கட்சியை காப்பாற்றவேண்டும் என்பதற்காக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டார். இத்தனை காலமும் மஹிந்த ராஜபக் ஷ மோசமான தலைவர் என விமர்சித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் கட்சியில் அவரை இணைத்துக்கொண்டுள்ளார். இதன் பின்னணி என்னவென்பது எமக்குத் தெரியாது. ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தலைவர் என்ற வகையில் அவரால் சுயாதீனமாக ஒரு தீர்மானத்தை கூட எடுக்க முடியாதுள்ளது. இந்த தலைமைத்துவம் எவ்வாறு நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்ல முடியும்.

எனவே தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரினதும் வாக்குகளை பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அவரது உண்மை முகத்தை வெளிப்படுத்தி விட்டார். மஹிந்த ராஜபக் ஷவுக்கு மீண்டும் ஆட்சியைக் கொடுத்து பழைய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது. இந்த நாட்டில் ஏற்பட்ட ஜனநாயக மாற்றத்தை மீண்டும் சர்வாதிகாரிகளின் கைகளில் கொடுக்க மக்கள் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலில் மஹிந்தவின் மோசடிகளை மட்டும் அல்ல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொய் வாக்குறுதிகளை பற்றியும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம். இவர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு செய்யும் ஏமாற்று வேலைகளையும் பொய்களையும் நாம் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி மாற்றம் ஒன்றை கொண்டு வருவோம். மஹிந்தவை மட்டும் அல்ல மைத்திரி அரசாங்கத்தையும் வீழ்த்துவதே எமது இலக்காகும் என அவர் குறிப்பிட்டார்.

Related

தலைப்பு செய்தி 3120883902474116912

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item