மைத்திரியின் கருத்து சுதந்திரக் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும்: பசில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே வெற்றி பெறச் ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_996.html

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய கருத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே வெற்றி பெறச் செய்யும் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மைத்திரியின் கருத்து குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் கீழும் குதித்து வருகின்றனர். எனினும், இந்தக் கருத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றி வாய்ப்பு உறுதியாக்கியுள்ளது.
எனினும் சொந்தக் கட்சியின் வேட்பாளர் தோல்வியடைவார் என கட்சியின் தலைவர் குறிப்பிடுவது மிகவும் பாரதூரமானது.
இதனால் ஜனாதிபதிக்கும் அவரை சுற்றியிருக்கும் தரப்பினருக்கும் பாரிய பாதகம் ஏற்படும்.
ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி குறித்து பிரச்சாரம் செய்த போதிலும் நினைவிருக்கும் நாளில் தனியாக ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவியினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆற்றிய உரை தொடர்பில் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் பசில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate