சஜின் வாஸ் குணவர்தனவுக்கு சரும நோய் இல்லை! உடனடியாக சாதாரண சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவை சாதாரண கைதிகள் இருக்கும் சிறைக்கு மாற்றுமாறு கொழும்ப...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_829.html

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவை சாதாரண கைதிகள் இருக்கும் சிறைக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி ரணவக்க குணதிலக்க உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் 16 வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சஜின் வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சஜின் வாஸ் குணவர்தன பாரதூரமான சரும நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அப்படியான நோய் எதுவும் அவருக்கு இல்லை என தெரியவந்துள்ளது. இந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை கவனத்தில் எடுத்து கொண்ட நீதிபதி, சஜின் வாஸ் குணவர்தனவை சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து உடனடியாக சாதாரண கைதிகள் இருக்கும் சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate