மஹிந்த பற்றிய ஜனாதிபதியின் நிலைப்பாடு காலம் கடந்தது!– ஜே.வி.பி.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு காலம் கடந்தது என ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலா...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_377.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்பிலான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு காலம் கடந்தது என ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்க தாம் இணங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
எனினும், வேட்பு மனு வழங்க உடன்படவில்லை என்ற ஜனாதிபதியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாரில்லை.
காலம் கடந்தே ஜனாதிபதி, மஹிந்த பற்றிய தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் மூன்று தடவைகள் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
மூன்றாம் சந்திப்பு இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டது, இது பற்றி ஜனாதிபதி எவ்வித கருத்தையும் கூறவில்லை.
மூன்றாம் சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க ஜனாதிபதி மைத்திரி இணங்கியதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக ஜனாதிபதி கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இது மக்களிடமிருந்து உண்மை மறைக்கப்பட்ட ஓர் நிலைமையாகும்
அனைத்து விடயங்களும் நடந்து முடிந்ததன் பின்னர் ஜனாதிபதி இவ்வாறான கருத்து வெளியிடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.
கம்பஹா மாவட்டத்தில் சரண குணவர்தனவிற்கு வேட்பு மனு வழங்காது அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இது மக்களை ஏமாற்றும் ஓர் முயற்சியாகும்.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், எதனோல்காரர்கள், கப்பக்காரர்கள், கசினோகாரர்கள் போன்றவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது என ஐக்கிய மக்கள் சுநத்திரக் கூட்டமைப்பு கூறிய போதிலும், அவ்வாறான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பலருக்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் யக்கல பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் நேற்று குறிப்பிட்டுள்ளார்.