விலகிச் செல்பவர்களால் மஹிந்தவின் வாக்கு பலத்திற்கு பாதிப்பில்லை: பிரசன்ன ரணதுங்க
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாக்கு பலத்திற்கு பாதிப்பு ஏற்படப...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_317.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்றவர்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வாக்கு பலத்திற்கு பாதிப்பு ஏற்படப்போவதில்லை என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் சென்று ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் மஹிந்தவிற்கு ஆதரவாக செயற்படவில்லை.
இதனால் மஹிந்தவின் வாக்கு அடிப்படைக்கு இவர்களின் கட்சி மாற்றம் தாக்கத்தை செலுத்தாது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னரும் விலகிச் சென்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பான நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.
எனினும் ராஜித, அர்ஜூன, எம்.கே.டி.எஸ் போன்றவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென பிரசன்ன ரணதுங்க சிங்கள நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate