வேட்புமனு விவகாரம்! மஹிந்த தாக்கியதை மூடி மறைக்க முயற்சிக்கும் சுசில்!
அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு குழுவை கெட்ட வாரத்தையில் திட்டிய மஹிந்த, சுசிலையும் தாக்கினார் என ஊடகங்களில் செய்தி ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_258.html

அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்புமனு குழுவை கெட்ட வாரத்தையில் திட்டிய மஹிந்த, சுசிலையும் தாக்கினார் என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
இந்த செய்தியினால் தான் மிகவும் கடினமாக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் ஒருவருடன் தொலைப்பேசியில் கலந்துரையாடும் போது சுசில் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவொரு போலியான செய்தி என வெளியிடுமாறு அவருக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் போது தனியார் தொலைக்காட்சி உரிமையாளர் “இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தப் போவதாக அறிவித்தீர்கள் என்றால் அதனை நாங்கள் செய்தியாக ஒளிபரப்ப முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தொலைக்காட்சி உரிமையாளர், “உண்மையில் அது போலியானதா கதையா?” என வினவிய போது, அதற்கு சுசில் பிரேமஜயந்த “தாக்குதல் ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை திட்டியது மாத்திரமே” என கூறியுள்ளார்.
“வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவு திட்டினாரா” என தொலைக்காட்சி உரிமையாளர் வினவிய போது அதற்கு அவர் தெளிவான ஒரு பதிலை வழங்கிவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சற்று நேரம் அமைதியாக இருந்த சுசில் தொலைப்பேசி இணைப்பை துண்டிப்பதற்கு முன்னர், “அந்த கதையை அவ்வாறே விட்டு விட்டால் மூடி மறைந்து விடும் ஊடகவியலார் சந்திப்பை ஏற்பாடு செய்தால் பிரச்சினை மீண்டும் ஆரம்பித்து விடும்” என குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate