பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திப் பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசணை
பொலன்னறுவை மாவட்டதின் அபிவிருத்தி பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) அதிகாரிகளுக்கு ஆலோசணை வ...


பொலன்னறுவை மாவட்டதின் அபிவிருத்தி பணிகளை 5 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி குழு பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தியின் முதல் இரண்டு ஆண்டுகளில் கல்வி , சுகாதாரம் மற்றும் குடிநீர் ஆகியவை தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு இதன் போது ஜனாதிபதி ஆலோசணை வழங்கியுள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் கிராமிய பாடசாலைகள் தொடர்பிலும் கூடிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.
பொலன்னறுவை மாவட்டத்தின் 7 பிரதேச செயலகங்களில் இருந்து 7 பாடசாலைகளை தெரிவு செய்து கல்வி துறை மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை வழங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளுக்கு தேவையான சத்திர சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை இயந்திரங்கள் என்பவற்றை விரைவில் கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசணை வழங்கியுள்ளா்ர.
இந்த அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் இடம்பெறும்.