அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிர்கட்சி! திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல சித்தார்த்த தேரர் விசனம்
தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிர்க்கட்சி இடையூறு ஏற்படுத்தி வருவதால், மக்களுக்கான பணிகள் பாதிப்படையவதாக த...

தென் மாகாணம் ஆளுநர் ஹேமகுமார மல்வத்து விகாரைக்கு விஜயம் மேற்கொண்ட போது தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை கொண்ட எதிர்கட்சியின் அழுத்தம் மற்றும் எதிர்ப்புக்கள் காரணமாக அரசாங்கத்தினால் எந்த ஒரு காரியங்களையும் ஒழுங்கான முறையில் செய்துக்கொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய ஜனாதிபதியின் நியமிப்பிற்கு பின்னர் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற வடிவமைப்பு நாட்டை சீரழிக்கும் வகையில் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
பல கிராமப்புற பகுதிகளில் உள்கட்டமைப்பு அபிவிருத்திகளில் குறைகள் காணப்படுகின்ற போதிலும் கடந்த ஆட்சி காலத்தில் கிராமப்புற பகுதிகளில் சாலைகள் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.