சான் பிரான்சிஸ்கோவை இருளில் மூழ்க வைத்த அணில்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் குட்டி அணில் ஒன்று செய்த சேட்டையால் 45,000 பேர் மின்சாரமின்றி இருளில் தவித்துள்ளனர். அ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_563.html
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் குட்டி அணில் ஒன்று செய்த சேட்டையால் 45,000 பேர் மின்சாரமின்றி இருளில் தவித்துள்ளனர்.
அங்குள்ள பசிபிக் கேஸ் அண்ட் எலக்ட்ரிக் என்ற நிறுவனம் பல வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு 10.15 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ பகுதியில் மின்சாரம் தடைபட்டதாக அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்தது.
மேலும் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அணில் ஒன்று தொழில்நுட்ப உபகரணத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதால் கிழக்கு சான் பிரான்சிஸ்கோவின் பெர்க்லி, ஓக்லாந்து உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் தடைபட்டதாக தெரிவித்துள்ளார்.