சம்மிக்கவின் அழைப்பின் பேரில் அப்துல்கலாம் இலங்கை வருகிறார்
எதிர்வரும் 26-27ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள “அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்கான எரிசக்தி பிரவேசம்” என்ற தலைப்பிலான இர...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_425.html
எதிர்வரும் 26-27ஆம் திகதிகளில் இலங்கையில் நடைபெறவுள்ள “அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்கான எரிசக்தி பிரவேசம்” என்ற தலைப்பிலான இருநாள் சர்வதேச மாநாட்டில் முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல்கலாம் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார் என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
அப்துல்கலாமை டில்லியில் அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்த எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த மாநாட்டில் பங்குபற்றி உரையாற்றுமாறு அழைப்பு விடுத்தார்.அழைப்பை ஏற்ற அப்துல் கலாம்- இந்தியா, இலங்கை போன்ற மிக நீண்ட நாகரிக வரலாறு உள்ள தெற்காசிய நாடுகளுக்கு அறிவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் வரலாற்று முக்கிய மரபுரிமையாகும். எரிபொருள், நிலக்கரி, எரிவாயு வெப்பம் காரணமாக, பாரதூரமான சுற்றாடல் விளைவுகள் உருவாகியுள்ளன.
இவற்றுக்கும் விஞ்ஞான ரீதியில் தீர்வு காண்பதைப் போன்று சமூக தீர்வுகளையும் காண்பது இன்று மனித சமூகத்தின் முக்கிய அடிப்படை தேவையாகும் என்று தெரிவித்தார்.