ஐரோப்பாவின் வயதான மனிதர் மரணம்: இரண்டு வாரங்களுக்கு முன்னர் 111வது பிறந்த நாளை கொண்டாடியவர்
ஐரோப்பாவிலேயே மிகவும் வயதான நபரான நாசர் சிங் தனது 111 வது வயதில் மரணமடைந்துள்ளார். பிரித்தானியாவின் சுந்தர்லாந்து பகுதியை சேர்ந்தவர் நாசர...

http://kandyskynews.blogspot.com/2015/06/111.html

பிரித்தானியாவின் சுந்தர்லாந்து பகுதியை சேர்ந்தவர் நாசர் சிங். 111வயதான இவர் ஐரோப்பியாவிலேயே மிகவும் வயதான மனிதர் என்று கூறப்படுகிறது.
பஞ்சாபை சேர்ந்த நாசர் சிங் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் பிரித்தானியாவில் குடியேறினார். இவருக்கு 6 மகன்கள் , 3 மகள்கள் ,34 பேரக்குழந்தைகள் மற்றும் 63 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தனது 90வது வயதில் மரணமடைந்தார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக இந்தியா வந்த அவர் கடந்த சனிக்கிழமை மரணமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் தனது 111வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.