அனுராதபுரம் குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு, 10 பேர் காயம்
அனுராதபுரம் குருநாகல் பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளன...


அனுராதபுரம் குருநாகல் பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிய ரக உழவு இயந்திரமொன்று இன்று (07) அதிகாலை பவுசர் ஒன்றுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒருவயது ஆண் குழந்தையும். 50 வயதான பெண்ணும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.