சிராணி பண்டாரநாயக்கவின் புதல்வர் மஹிந்தவின் புதல்வருக்கு வைத்தார் ஆப்பு!

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்த்தான் தெரியும் என்பது இதைத்தானோ? தனது தாயார் சிராந்தி ராஜபக்சவிற்கு நிதி மோசடி பிரிவினால் அ...


தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்த்தான் தெரியும் என்பது இதைத்தானோ?

தனது தாயார் சிராந்தி ராஜபக்சவிற்கு நிதி மோசடி பிரிவினால் அனுப்பப்பட்டிருக்கும் அழைப்பு குறித்து தன் கவலையை முகநூலில் வெளிப்படுத்திய நாமல் ராஜபக்ச செமத்தியாக வாங்கிக் கட்டியுள்ளார். மகிந்த ராஜபக்ச அரசினால் பழிவாங்கப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் புதல்வர் கொடுத்த அடியினால், சப்தநாடியும் ஒடுங்கிப்போய் பதுக்கிவிட்டார் நாமல்.

மகிந்த ஆட்சிக்காலத்தில் பெரும் நிதித்சுருட்டலில் சிராந்தியும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவரை நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இது பற்றி முகநூலில் கருத்து தெரிவித்திருந்த நாமல், அரசியலில் சம்பந்தப்பட்டிருக்காத தனது தயாரைக்கூட விட்டு வைக்கிறார்கள் இல்லை. நல்லாட்சியின் இலட்சணம் இதுவா என சூடாக கேள்வியெழுப்பியிருந்தார்.

நாமலின் பதிவின் கீழேயே சுடச்சுட பதில் வழங்கியிருக்கிறார் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் புதல்வர் சவீன் பண்டாரநாயக்க. தனது தாயாரோ, தானோ, தனது குடும்பமோ யாருமே அரசியலில் சம்பந்தமற்றவர்கள் எனினும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தமக்கிழைக்கப்பட்ட அநீதியினால் தாம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருப்போம் என இப்போது புரிகிறதா என கேள்வியெழுப்பியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் முகநூல் பக்கத்தில் இடம்பெற்ற இவ்விவாதத்தில் சவீன் பண்டாரநாயக்கவின் பதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.sa
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!

Related

இலங்கை 4190611198989047199

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item