பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாகி பிரயோகம் மேற்கொண்டவர் சுட்டுக் கொலை

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன...







2009ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரத்தில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அத்துடன், தலிபான் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் இன்று அதிகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த நடடிக்கையை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான ஹபீஸ் அலியாஸ் மொஹமட் என்பவரே இந்த நடவடிக்கையின் போது, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related

தலைப்பு செய்தி 3233202684865662353

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item