எனது தோல்விக்கு ஞானசாரவே காரணம்!– முன்னாள் ஜனாதிபதி
சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_902.html

கடந்த ஜனவரி 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் தான் தோல்வியடைய போவதாக அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி தன்னுடன் இருந்த அமைச்சர்களிடம் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுபலவின் ஞானசாரவே இதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும். ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம் நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்டவில்லை.
ஒருத்தனின் முட்டாள் தனம் முழு பரம்பரையையும் பாதிக்கும். ஞானசாரவின் பின்னணியில் நோர்வே இருக்கின்றது. அவன் நோர்வேயின் சூழ்ச்சிக்காரன்.
ஞானசாரவும் டிலந்த விதானகேவும் இணைந்துதான் இந்த விளையாட்டை ஆடினர்.
தற்போது எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ஆத்திரமடைந்து கத்தியதாக கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate