மேதின மேடையில் சந்திரிகா,மைத்திரி, மகிந்த! - அனுர பிரியதர்சன யாபா நம்பிக்கை

எதிர்வரும் மே தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே ம...

எதிர்வரும் மே தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் ஒரே மேடையில் ஏறுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அனுர பிரியதர்சன யாபா இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஹைட் மைதானத்தில் இம்முறை சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு அமைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. இரண்டு ஜனாதிபதிகளும் அழைப்பினை ஏற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.மே தினக் கூட்டம் தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மூன்று பேரணிகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை நடத்தவுள்ளது.

இந்தப் பேரணிகளுக்கு பெரும் எண்ணிக்கையிலானவர்களை இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உழைக்கும் மக்களுக்கு பாரியளவில் சேவையாற்றியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் ஆட்சிக் காலத்தில் உழைக்கும் வர்க்கத்தினர் பல்வேறு வெற்றிகளை ஈட்டியுள்ளனர். விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி ஒன்று அமைக்கப்படும் என்ற செய்தியை மக்களுக்கு அறிவிப்பதனை தொனிப்பொருளாகக் கொண்டு இம்முறை கூட்டம் நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 3657467290642685881

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item