கூட இருந்தவர்கள் குழி பறிந்து விட்டார்கள்! புலம்பும் மஹிந்த

தன்னுடன் கூட இருந்தவர்களே தனக்கு துரோகம் செய்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்க...


தன்னுடன் கூட இருந்தவர்களே தனக்கு துரோகம் செய்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் மஹிந்த இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மஹிந்த மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் வீட்டில் உணவு சுவைஞராக கடமையாற்றியவர் ஆகியோர் தமக்கு எதிராக செயற்பட்டனர்.

புதிய அரசாங்கத்தின் சார்பில் தம்மையும் தமது குடும்பத்தினரையும் உளவு பார்த்து தகவல் வழங்கியுள்ளனர்.

தமது பாதுகாப்பிற்கு பொறுப்பாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, உளவுத் தகவல்களை புதிய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி வரையில் தமது அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து உளவுத் தகவல்களை, புதிய அரசாங்கத்திற்கு வழங்கியதாக மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 7086539006005637529

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item