தொடரும் அரசியல் நெருக்கடி! மஹிந்தவின் காலில் விழும் மைத்திரி
சிறிலங்காவில் மஹிந்தவின் வீழ்ச்சியை அடுத்து, அரசியல் ரீதியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் அதிகபெரும்பான்மை கொண...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_397.html
சிறிலங்காவில் மஹிந்தவின் வீழ்ச்சியை அடுத்து, அரசியல் ரீதியில் பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் அதிகபெரும்பான்மை கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவடையும் அபாய கட்டத்தில் உள்ளது.
சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு பகுதியினர் மைத்திரிபாலவுக்கும், மற்றொரு பகுதியினர் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்குவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் நோக்கில், மஹிந்தவுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே தின பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு கட்சியினால் விடுத்த கோரிக்கையையும் மஹிந்த புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில் மஹிந்தவுக்கும் எனக்கு இடையிலான சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்து. கட்சியினை மனதில் கொண்டே நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
எனவே கட்சியின் நலனுக்காக எதிர்வரும் நாட்களில் மஹிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக மைத்திரிபால தெரிவித்துள்ளார்.
காலியில் இடம் பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் மைத்திரி இந்த தகவலை வெளியிட்டார்.
சிறிலங்கா சுகத்திர கட்சியை இரண்டாக உடைந்து அரசியல் லாபம் தேடும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்காக மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அரசியல் ஈடுபடுத்த ரணில் மறைமுகமாக செயற்பட்டு வருகிறார் என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.