கருணாவை விசாரணை செய்யுமாறு உலமா கட்சி கோரிக்கை
முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை விசாரணை செய்யுமாறு இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத், காணாமல் போனோரை கண்டறியு...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_350.html

கல்னையில் நடைபெற்ற காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் சாட்சியமளித்தார்.
இதன்போது 1990ம் ஆண்டு புலிகளால் கைது செய்யப்பட்டு காணாமல்போன தனது சகோதரர் அக்ரம் மற்றும் தந்தை சம்பந்தமாகவும் முன்னாள் அமைச்சர் முரளிதரனிடம் விசாரிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விசாரணைகள் கடந்த இரு நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது.
ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate