ஜனாதிபதியின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவரை கைதாக்கவில்லை: ருவன்
அங்குனுகொலபெலஸ்ஸயில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டத்தில் பாதுகாப்பிற்கு பங்கம் ஏற்பட்டமை ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_343.html
ஜனாதிபதி கலந்துக்கொள்ளும் இவ்வாறான ஒரு கூட்டத்திற்கு துப்பாக்கி கொண்டு செல்வதற்கு எவருக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
அப்படியிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாப்பாளர் ஒருவர் இக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்றிருந்தார்.
இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்பொழுது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அங்குனுகொலபெலெஸ்ஸ பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்ட கூட்டமொன்று இடம் பெற்றது.
அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பாதுகாப்பாளர் என கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவர் அவ்விடத்திற்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
எப்படியிருப்பினும் விசேட அதிரடிப்படையினரால் குறித்த இராணுவ சிப்பாய் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகைள் சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பித்துள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகின, எனினும் இந்நபரை இதுவரை கைது செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதுவேளை இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமலிடம் வினவிய போது தனக்கு இது தொடர்பில் எதுவும் தெரியாது எனவும், தான் ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயங்களில் தலையீடு செய்ய போவதில்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.