ஜேர்மன் விமான விபத்து: முதன்மை விமானியின் புகைப்படம் வெளியீடு

பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளான ஜேர்மன் விமானத்தின் முதன்மை விமானியின் புகைப்படம் முதன் முறையாக தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் ம...

பிரான்ஸ் நாட்டில் விபத்துக்குள்ளான ஜேர்மன் விமானத்தின் முதன்மை விமானியின் புகைப்படம் முதன் முறையாக தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவிலிருந்து டஸ்சல்டஃப் நகருக்கு புறப்பட்ட ஜேர்மன் விங்க்ஸ் என்ற பயணிகள் விமானம் பிரான்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் பயணித்த 150 பேரும் பலியாகியுள்ளனர்.

துணை விமானியான Andreas Lubitz(27) வேண்டுமென்றே மலையில் மோதி விபத்தை ஏற்படுத்தி கொன்றதாக இரண்டு கருப்பு பெட்டிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் ஜேர்மன் விங்ஸின் முதன்மை விமானியான Patrick Sondheimer(36) புகைப்படம் கடந்த 13 நாட்களாக வெளியிடப்படவில்லை.

தற்போது, ஜேர்மன் விங்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ள Cologne நகரில் அவரது புகைப்படம் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

முதன்மை விமானி, விபத்துக்கு காரணமான துணை விமானி மற்றும் பிற விமான குழுவினரின் புகைப்படங்கள் விமான நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.

விமானத்தை கடைசி நிமிடம் வரை காப்பாற்ற போராடிய முதன்மை விமானியை ஜேர்மனிய மக்கள் ஒரு ஹீரோவாக பார்க்கிறார்கள்.

இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான அவர், சமீபத்தில் தான் நீண்ட தூரம் பயணிக்கும் விமானத்திலிருந்து குறைவான தூரம் பயணிக்கும் விமானத்தின் விமானியாக பொறுப்பை மாற்றிக்கொண்டார்.

இதன் மூலம் தனது அன்பான குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட முடியும் என தீர்மானித்திருந்தார்.

Related

உலகம் 1769567744468653727

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item