மக்கள் கோரினால் தேர்தலில் போட்டியிடுவேன்! - மகிந்த பேட்டி
தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்தால் தன்னால் அதனை புறக்கணிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியாவி...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_106.html

‘நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னமும் நான் தீர்மானிக்கவில்லை, ஆனால் மக்கள் வேண்டுகோள் விடுத்தால் என்னால் புறக்கணிக்க முடியாது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளேன். நான் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன். எனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருந்துள்ளேன்.
இவ்வாறான சூழ்நிலையில் கட்சி எனக்கு ஏன் போட்டியிட அனுமதி மறுக்கவேண்டும். நான் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி சார்பிலேயே போட்டியிட விரும்புகிறேன். நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவன் என்பதை புறக்கணிக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.