64 இலங்கையர்கள் வாழும் சிசெல்ஸில் இலங்கை வங்கிக் கிளை! - மர்மம் கண்டறியச் செல்கிறது குழு
சீசெல்ஸிலிருந்து சட்டவிரோதமாக பரிமாற்றப்பட்ட பணம், சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதற்கென விசேட குழுவொன்று இங்கிர...

http://kandyskynews.blogspot.com/2015/04/64_6.html

இதன் உண்மைத்தன்மைகளை ஆராயும் பொருட்டே விசேட குழு சீசெல்ஸ் செல்கிறது. நிதியமைச்சு, இலங்கை வங்கி மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் முக்கிய பிரதிநிதி களடங்கிய குழுவே இலங்கை - சீசெல்ஸ் இடையிலான சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதெனவும் அமைச்சர் கூறினார்.
சீசெல்ஸ் நோக்கி பயணமாவதற்கு முன்னமே விசாரணைகளை இங்கிருந்தபடி ஆரம்பிக்குமாறும் அமைச்சர் கருணாநாயக்க குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைப் பிரதிநிதிகளடங்கிய குழு, சீசெல்ஸ் நாட்டில் தங்கியிருக்கும் காலப் பகுதியில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் மற்றும் சீசெல்ஸ் ஊடாக ஏனைய நாடுகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பணம் ஆகியன குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கியின் அனுமதியின்றி 2011 ஆம் ஆண்டில் எதற்காக இலங்கை வங்கியின் கிளை சீசெல்ஸ்ஸில் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பிலும் மத்திய வங்கி விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
சுமார் 64 இலங்கையர்கள் மாத்திரமே சீசெல்ஸ் நாட்டில் தங்கியிருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிற்கு காட்டாத அக்கறையாக முன்னாள் அரசாங்கம் சீசெல்ஸில், இலங்கை வங்கிக் கிளை ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணமென்ன வென்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
இலங்கை வங்கி தனது கிளையை சீசெல்ஸ் நாட்டில் ஆரம்பிப்பதற்காக மத்திய வங்கியிடம் அனுமதி கோரிய போதும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. மேலும் தேசிய விமான சேவையூடாக அநேகமான பொருட்கள் சீசல்ஸிற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. அந்நாட்டிலிருந்து வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக சில தனிப்பட்ட நபர்கள் எடுத்த முயற்சியாகவே நாம் இதனை கருதுகின்றோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவு இதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம், உலக வங்கி இந்த விசாரணைகளுக்கான பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.