19வது திருத்தத்தைத் தோற்கடிக்க சதி செய்கிறாரா மைத்திரி? - ஜேவிபிக்கு வந்தது சந்தேகம்.
19ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் மீது ஏன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க மறுக்கின்றார்? என்று ஜே.வி...


ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்போவதில்லை எனப் பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை எதனையும் எடுக்காது அமைதியாக இருந்து வருகின்றார். ஜனாதிபதியின் இந்த அமைதி - மெளனம் தொடர்பில் எமக்கு சந்தேகம் நிலவுகின்றது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் ஜனாதிபதி தெளிவான உரையை ஆற்றவேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகக் கூறியே பல பேர் ஆட்சியைக் கைப்பற்றினர்.
ஆனால், ஜனநாயகத்தை மீறியே செயற்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ளதுபோல் நாடாளுமன்றம் கலைக்கப்படவேண்டும். தேர்தலைப் பிற்போடுவதில் ஜனாதிபதிக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டுள்ளதா? எமது கேள்விகளுக்கு நாடாளுமன்றில் தெளிவான பதில்களை ஜனாதிபதி வழங்க வேண்டும்" என்றார்.