விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்தல்: அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை
விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக இலங்கை அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 ஆண...
http://kandyskynews.blogspot.com/2015/03/3-7.html

விடுதலைப்புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய குற்றத்திற்காக இலங்கை அகதிகள் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்கு முன்னர், மதுரை சக்கிமங்கலத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமுக்கு வெளிமாநிலத்தில் இருந்து பயங்கர வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன திரவம் கொண்டு வரப்பட்டதாகவும், அந்த திரவத்தை இங்கிருந்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு கொண்டு சென்று பின்னர் படகு மூலம் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு அனுப்ப இருந்ததாகவும் கியூ பிரிவு பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பொலிசார் சக்கிமங்கலம் அகதிகள் முகாமில் கடந்த 8.4.2008 அன்று சோதனை செய்தனர். அப்போது 250 மில்லி கிராம் ரசாயன திரவத்தை அவர்கள் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், ரசாயன திரவத்தை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் அகதிகள் கண்ணன் ( 40), நவநீதகிருஷ்ணன் (38), எட்வர்டு ஜெயக்குமார் (38), இலங்கைநாதன் (37) ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவர்களை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை 4வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் எட்வர்டு ஜெயக்குமாரை தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் கிடைத்தது.
சில நாட்களில் கண்ணன் இலங்கைக்கு தப்பிச் சென்றார். மற்ற 3 பேரும் வழக்கு விசாரணையின்போது ஆஜராகி வந்தனர். அரசு தரப்பில் வெள்ளரிப்பட்டி என்.செல்வம் ஆஜராகி வாதாடினார்.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், தலைமறைவான கண்ணனை தவிர மற்ற 3 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும், தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி என்.வேங்கட வரதன் உத்தரவிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate