ராஜபக்ஷ குடும்பத்தின் மோசடிகளை விசாரிக்க குற்ற விசாரணைப் பிரிவு
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசே...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_866.html
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நிதிக் குற்றவியல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ம் திகதி அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலம் இந்த விசேட பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றவியல் பிரிவு பிரதிப் பொலிஸ்மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், துணை பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் இந்த விசேடப் பிரிவு இயங்க உள்ளது.
நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இடம்பெற்று வரும் நிதி மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் இந்தப் பிரிவு விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டுள்ளது.
சட்ட விரோத சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது