இது யூதர்கள் நாடு – எதிர்ப்பவர்களிற்கு இங்கு இடமில்லை!! (காணொளி)
பிரான்சின் யூத அமைப்புக்களின் பிரதிநிதித்துவக் குழுவான Crif (Conseil représentatif des institutions juives de France) இன் 30வது வருட வ...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_771.html
பிரான்சின் யூத அமைப்புக்களின் பிரதிநிதித்துவக் குழுவான Crif (Conseil représentatif des institutions juives de France) இன் 30வது வருட விருந்துபசாரம் நேற்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த், பிரான்சில் யூத மக்களிற்கான பாதுகாப்பிற்கான உறுதியை மீண்டும் வழங்கியுள்ளார்.
2014ம் ஆண்டிலிருந்து யூத எதிர்ப்பு வன்முறைகள் பிரான்சில் இரட்டிப்பாகி உள்ளது. இதற்கெதிரான «உடனடியானதும், கடுமையானதுமான» நடவடிக்கைள் இனவாதம், யூதஎதிர்ப்புவாதம், போன்றவற்றிற்கெதிராக எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“யூத மக்கள் பிரான்சில் தங்களது சொந்த நாட்டில் உள்ளார்கள். யூதர்களே இது உங்கள் நாடு. உங்கள் நாடு உங்களிற்கான பாதுகாப்பை வழங்கும். யூத எஎதிர்ப்புவாதம் செய்பவர்களிற்கு இந்த நாட்டில் இடமில்லை. எனது இந்தச் செய்தி வெறுமனே ஊடகங்களோடு நின்று விடாமல், குற்றவியற் சட்ட நடவடிக்கைகளில் நடைமுறைப்படுத்தப்படும். எங்களை எதுவும் பிரித்து விடமுடியாது. இனங்களின் பெயர்கள் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் மக்கள் ஒன்றுபட்டுத்தான் இருக்க வேண்டும். ஜிகாதிப் பயங்கரவாதத்தால் தூண்டப்படுபவர்களைத் தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரான்ஸ் கடுமையாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கான பெரும் சட்ட மாற்றங்களும் புலனாய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பிரான்சின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன. இந்தத் தீவிரவாதத்தால் பிரான்சில் யூதர்களைவிட முஸ்லிம் மக்களே முதலில் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களைக் காப்பாற்றுவது எங்களது கடமை” எனச் சிறப்பான உரை ஒன்றினை ஜனாதிபதி ஆற்றி உள்ளார்.