ஐ.நா.விசாரணை அறிக்கையை பிற்போடாது வெளியிடவேண்டும் ஜெனீவா அதிகாரிகளிடம்சுமந்திரன் வலியுறுத்தல்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையினுடைய விச...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_752.html

ஜெனீவா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று வௌ்ளிக்கிழமை ஐ.நா மனித உரிமை சபையின் இலங்கை தொடர்பான விசாரணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்திருந்தார். சுமார் ஒன்றரை மணிநேரம் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியிருந்தார்.
குறித்த சந்திப்பு தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
ஐக்கிய நா டுகள் விசாரணை அறிக்கையை தாமதம் செய்யாது ஏற்கனவே அறிவித்திருந்ததன் பிரகாரம் அதனை வௌியிடவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐ. நா மனித உரிமைகள் சபை ஆணையாளர் சீட் ராட் அல் ுஹசைனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த கடிதத்தை மையப்படுத்தியே குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
குறிப்பாக, இந்த அறிக்கையை வௌியிடாது தாமதம் செய்வதனால் ஏற்பபடக்கூடிய விளைவுகளை இந்த சந்திப்பில் எடுத்துரைத்துரைக்கப்பட்டுள்ளது. காலதாமதம் செய்வது அறிக்கையின் முக்கியத்துவத்தை அற்றுப்போகச் செய்துவிடும் செய்துவிடும் என்பதையும் எடுத்துக்கூறினேன்.
தமது கருத்துக்களை ஆழமாக அவர்கள் செவிமடுத்திருந்தனர். விசாரணை அறிக்கையை வௌியிடுவது தொடர்பான தீர்மானத்தில் மனித உரிமைகள் சபையின் உறுப்புநாடுகளின் செல்வாக்கு முக்கியமானது என்பதால், உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதகவும் அவர் தெரிவித்துள்ளார்.