அரசியல்வாதிகளுக்கு எதிரான படம்: நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல்
அரசியல்வாதிகளுக்கு எதிராக படம் எடுத்திருப்பதால், நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. ”படத்தை வெளியிட்டால், விபரீத விளைவுகள்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_719.html

அரசியல்வாதிகளுக்கு எதிராக படம் எடுத்திருப்பதால், நடிகை ஷகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. ”படத்தை வெளியிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும்” என்று போனில் மிரட்டியிருக்கிறார்கள்.
கவர்ச்சி நடிகை ஷகிலா, மலையாள பட உலகில் கவர்ச்சி நாயகியாக நடித்து வந்தார். அவர் நடித்த பல கவர்ச்சி படங்கள் கேரளாவில் பெரும் வெற்றியை பெற்றன. அவருடைய வெற்றியை பொறுக்க முடியாமல், அங்கிருந்து அவரை சில முன்னணி கதாநாயகர்கள் விரட்டியதாக பேசப்பட்டது.
அதன்பிறகு ஷகிலா, தமிழ் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். அவர், ஒரு அரசியல் கட்சி பிரமுகரை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த திருமணம் கடைசி நேரத்தில் ரத்து ஆகிவிட்டது.
விரக்தி அடைந்த ஷகிலா, தெலுங்கு பட உலகுக்கு சென்றார். அங்கு, ‘ரொமன்டிக் டார்கட்’ என்ற தெலுங்கு படத்தை டைரக்டு செய்து வருகிறார். நரேஷ்-ஸ்வேதா சைனி ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள். இது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சித்தரிக்கும் படம். பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு ஒரு பெண் பொங்கி எழுவது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
மலையாள பட உலகில் ஷகிலாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிரான காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஷகிலாவுக்கு கொலை மிரட்டல் வந்து இருக்கிறது. ‘ரொமன்டிக் டார்கட்’ படத்தை வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால், விபரீத விளைவுகள் ஏற்படும்” என்று போனில் சிலர் மிரட்டியிருக்கிறார்கள்.
இதை, ஐதராபாத்தில் நடந்த ‘ரொமன்டிக் டார்கட்’ பாடல் வெளியீட்டு விழாவில், ஷகிலாவே வெளியிட்டார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-
”இருட்டு உலகுக்குள் நடக்கும் சில பயங்கரங்களை படத்தில் சொல்லியிருக்கிறேன். அது, சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் என்னை மிரட்டுகிறார்கள். ஆனால், இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன். படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவேன்.”
இவ்வாறு நடிகை ஷகிலா பேசினார்.