ஓரினச் சேர்க்கை குற்றத்துக்காக மலேசிய எதிரணித் தலைவர் அன்வாருக்கு மீண்டும் சிறைத்தண்டனை!
மலேசியாவின் சுப்ரீம் கோர்ட் அந்நாட்டின் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது முன்னால் அரசியல் உதவியாளர் ஒருவருடன் கட்டாய ஓரினச் சேர்க்கையி...


இதனால் அன்வார் இப்ராஹிம் மறுபடியும் ஐந்தாண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க உள்ளதுடன் 2018 ஆம் ஆண்டு மலேசியத் தேர்தலில் போட்டியிடும் அந்தஸ்தையும் இழந்துள்ளார்.
தற்போது கோலாலம்பூரில் இருந்து 20Km தொலைவிலுள்ள சுங்காய் புலாக் சிறையில் அன்வார் அடைக்கப் பட்டுள்ளார். அன்வர் இன்று தாக்கல் செய்த மனுவில் தனக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக ஆளும் கட்சியின் சதி முயற்சியே இந்தக் குற்றச்சாட்டு என வாதிட்ட போதும் அதனை நீதிமன்றம் நிராகரித்ததுடன் அன்வரது குற்றம் தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் இருந்ததால் அவருக்கு சிறைத் தண்டனையை உறுதி செய்துள்ளது. மேலும் தற்போதைய பிரதமர் நஜீப் ரசாக் இனது ஆளும் கட்சிக்கு அன்வர் கடும் அச்சுறுத்தலாக விளங்கியதாகப் பரவலாகக் கருதப் பட்டதுடன் அன்வர் ஏற்கனவே இதற்கு முன் ஊழல் குற்றச்சாட்டில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
67 வயதாகும் அன்வர் மீது ஜனவரி 2012 இல் ஓரினச் சேர்க்கைக் குற்றம் சுமத்தப் பட்டு மேன் முறையீடும் தாக்கல் செய்யப் பட்டது. ஆனால் மார்ச் 2014 இல் மேன் முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை ரத்து செய்து அவர் மீது 5 வருட சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து மலேசியாவின் சுப்ரீம் நீதிமன்றமான ஃபெடரல் கோர்ட்டில் தாக்கல் செய்யப் பட்ட மனுவே இன்று மீளவும் நிராகரிக்கப் பட்டு இனி முறையீடு செய்வதற்கான வழிகளையும் அடைத்துள்ளது. இதனால் அன்வரது தண்டனையும் உறுதியாகியுள்ளது.