ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடை வேண்டும் சரத்அமுனுகம

ஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளமக்கள் பிரதிநிதிகள்   அரசியலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனு...

imagesஊழல் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளமக்கள் பிரதிநிதிகள்   அரசியலில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டி ஹதரலியத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் நேற்று  இதனைக் கூறியுள்ளார்

”ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை வெளியேற்றுவதற்காகவே மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.  துவிச்சக்கர வண்டிகளில்இ மோட்டார் சைக்கில்களில் வந்து தமது ஆடைகளை சீமெந்து பைகளில் கொண்டு வந்தவர்கள் பென்ஸ் கார்களில் செல்ல ஆரம்பித்தனர்.  அவ்வாறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் இருந்தால் கட்சி வேறுபாடு இன்றி அவர்களை அரசியில் இருந்து நீக்க வேண்டும்.  அவர் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டால் அவரை அரசியலில் இருந்து தடை செய்ய வேண்டும்.  அவர்களை விரட்ட 100 நாட்கள் போதாது என்றால் 300 நாட்களை பெற்றுக் கொள்ளுங்கள்.  தற்போது வேறு முயற்சிகள் இடம்பெறுகின்றன. குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் ஊடாக தண்டனை வழங்க வேண்டும்.  அரசியல் ரீதியிலும் தண்டனை வழங்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Related

இலங்கை 462167173041948859

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item