ரஷ்யாவின் முக்கிய எதிரணி அரசியல்வாதி சுட்டுக்கொலை

ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறு...

Boris Nemtsov in Moscow, 6 April 2009
ரஷ்யாவில் முக்கிய எதிரணி அரசியல்வாதியும் முன்னாள் துணைப் பிரதமருமான போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதிபர் மாளிகை உள்ள கிரெம்ளின் வளாகத்துக்கு அருகே உள்ள பாலம் ஒன்றை போரிஸ் நேம்ஸோவ் கடந்துகொண்டிருந்தபோது, காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரின் பின்புறத்தில் நான்கு துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளார்.
யுக்ரெய்னில் நடக்கும் போருக்கு எதிராக மாஸ்கோவில் ஞாயிற்றுக்கிழமை பேரணி ஒன்றை நடத்த அழைப்புவிடுத்து சில மணிநேரத்தில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை அதிபர் விளாடிமிர் புடின் கண்டித்துள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
எதிரணிச் செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவின் கொலை தொடர்பில் விசாரிப்பதற்காக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் குழுவொன்றை அதிபர் புடின் நியமித்துள்ளதாகவும் அவரது பேச்சாளர் கூறியுள்ளார்.
‘இஸ்லாமிய தீவிரவாதம்’ உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்தக் கொலைக்கான காரணங்கள் பற்றி விசாரித்துவருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
‘கொடூரமான கொலை’ என்று இந்தக் கொலையை வர்ணித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய அரசாங்கம் ‘உடனடியான, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான விசாரணை’ நடத்தவேண்டும் என்றுகேட்டுக்கொண்டுள்ளார்.
போரிஸ் நேம்ஸோவ் ‘ரஷ்யாவுக்கும் யுக்ரெய்னுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்ந்தார்’ என்று யுக்ரெய்ன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறியுள்ளார்.

Related

மொசூல் நகரை மீட்க இராக் படையினர் திட்டம்- பிரதமர் அல் அபாதி

        இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசுல் நகரை மீட்கத் திட்டம் இஸ்லாமிய அரசின் கட்டுப்பட்டில் உள்ள இராக்கின் வடக்கு நகரமான மொசூலை மீட்கும் நடவடிக்கைகளில் ...

ஐ.நா நிகழ்ச்சி நிரலில் போர்க்குற்ற அறிக்கை! – தோல்வி காணும் நி்லையில் இலங்கையின் இராஜதந்திரம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல், காலஅவகாசம் வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், மேற்படி அறிக்கை சமர்ப்பிப்பது குற...

ஜனாதிபதி மைத்ரிபல சிறீசேன பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

நண்பகல் 12.15 மணிக்கு ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை  ஜனாதிபதி மைத்ரிபாலா சிறீசேனா சந்தித்தார். இதைத் தொடர்ந்து, இருதரப்பு நல்லறவு, ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் கலந...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item