வர்த்தகர் கொலை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது: போலி சாட்சியங்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு
யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. விமலசேன மற்றும் அல்பிட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆனந்த ஆகியோர் கைதுசெய்யப்பட்...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_145.html

யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி. விமலசேன மற்றும் அல்பிட்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆனந்த ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொம்பே பகுதி ஹோட்டலொன்றின் உரிமையாளர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.
குறித்த வர்த்தகரை அவரது மகன் கொலைசெய்துள்ளதுடன், வேறொருவர் அந்தக் கொலையை செய்ததாக போலியான சாட்சியங்களும், ஆவணங்களும் தயார்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அதற்காக, போலி சாட்சியங்கள் ஊடாக கைதுசெய்யப்பட்ட நபரின் வீடருகில் வெடிபொருட்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
இதற்குப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்களை இன்று கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே,அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.