எலிசபெத் மகாராணியின் அழைப்பையேற்று மைத்திரிபால சிறிசேன மார்ச் 7இல் பிரித்தானியா பயணம்!

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்...

86b0b-maithirbala_srisena_1-png
இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத்தின் விசேட அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதம் 7ஆம் திகதி பிரித்தானியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
பிரித்தானியாவுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொள்ளும் ஜனாதிபதி, எலிசபெத் மகாராணியுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளதுடன், மகாராணி அளிக்கும் பகல் போசன விருந்துபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
மார்ச் 9ஆம் திகதி இலண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பொதுநலவாய தினம்’ நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறப்புரை ஒன்றையும் ஆற்றவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றபின் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த விஜயத்தின் போது மார்ச் மாதம் 12ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்து அரசியல், வர்த்தக மற்றும் பல்துறை சார்ந்தவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

Related

இலங்கை 306597992117979355

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item