தலிபான்கள் போராளிகள்; ISIS தீவிரவாதிகள் – அமெரிக்கா திடீர் பல்டி
ஆப்கன் தாலீபன்கள் தீவிரவாதிகள் அல்ல என வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்த...

ஆப்கன் தாலீபன்கள் தீவிரவாதிகள் அல்ல என வெள்ளை மாளிகையின் ஊடக துணைச் செயலாளர் அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருவதாக கூறும் அமெரிக்க அரசு. ஆப்கானிஸ்தானில் தாலிபன் களை ஒழிக்க தனது படையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஊடக துணைச்செயலாளர் எரிக் சூல்ட்ஸ், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “(ஆப்கன்) தாலீபன்கள் ஆயுதம் ஏந்திய போராளிகள்.
ஆனால் ஐ.எஸ். இயக்கத்தினர், தீவிரவாதிகள். எனவே நாங்கள் தீவிரவாத கும்பல்களுக்கு சலுகைகள் வழங்க மாட்டோம்” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செய்தியாளர்கள், “என்ன, தாலிபன்கள் தீவிரவாதிகள் இல்லையா?” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நான் தாலிபன்களை அப்படி கருதவில்லை. தாலிபன்கள், ஆயுதம் ஏந்திய போராளிகள்” என தான் கூறியதை உறுதிப்படுத்தினார்.
ஆனால் அதே அமெரிக்கா, ஆப்கான் தலீபான்களின் தலைவர் முல்லா உமர் தலைக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.61 கோடி) விலை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா முஸ்லிம் நாடுகளில் உள்ள எண்ணெய் வளஙக்களை சூராடுவதற்கு எதிராக உள்ளவர்களை தீவிரவாதிகள் என பட்டியலிடுவது இதன் மூலம் நீரூபனமாகின்றது.
கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தானில் உள்ள எண்ணெய் வளங்களை சூரையாடிய அமெரிக்க தற்போது ஈராக்கில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது