கிழக்கில் மு.கா. வின் தவறுகளும் தென்னிலங்கையில் பொதுபலசேனாவின் இனவாதாமும்
அன்றும் இன்றும் தென்னிலங்கை மக்களிடம் இந்த கிழக்கு முதல் அமைச்சர் என்ற அச்சம் உருவாகியள்ளது, தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு ம...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_568.html
அன்றும் இன்றும் தென்னிலங்கை மக்களிடம் இந்த கிழக்கு முதல் அமைச்சர் என்ற அச்சம் உருவாகியள்ளது, தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகணசபைக்கு முதல் அமைச்சராக வரவேண்டும் எனக் கூறுகின்றனர் ஆனால் இந்த விடயத்தில் மாற்றமாக தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைமையில் தமிழர் ஒருவர்தான் முதல் அமைச்சராக வரவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதிபூண்டுள்ளனர்.
உண்மையில் ஸ்ரீ.மு.கா தமிழ் தேசிய கூட்டமைப்புடுக்கு கிழக்கு மாகணசபை முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பின் தென்னிலங்கையில் ஒரு இன கலவரம் உருவாகுவற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கிவிடும். தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்தி படுத்தும் இந்த கிழக்கு மாகாணசபை முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் விட்டுகொடுப்பின் நிச்சியமாக தென்னிலங்கையில் ஒரு இனகலவரம் உருவாகும்.
உறங்கி போய்யிருக்கும் சிங்கள மதவாத,இனவாத அமைப்புக்கு இது உந்துசக்தியாக மீண்டும் இருக்கலாம். தென்னிலங்கை பெரும்பாண்மை மக்கள் தற்போதுதான் பொதுபல சேனாவின் கொள்கை பிழையென ஏற்றுகொண்டுள்ளனர் இந்த புதிய அரசியல் மாற்றத்தினால் ஆனால் ஸ்ரீ .மு.கா இந்த கிழக்கு மாகாணசபை முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பதனால் இனவாத அமைப்பான பொதுபல சேனாவுக்கு இந்த கிழக்கு முதல் அமைச்சர் விடயத்தை தென்னிலங்கை மக்களிடம் தூக்கி பிடித்து மீண்டும் இனவாத கருத்தை விதைத்து மீண்டும் ஒரு இனக்கலவரம் இந்த நாட்டில் தெற்கில் இருந்து உருவாகலாம், அப்போது தென்னிலங்கை பெரும்பாண்மை மக்கள் பொதுபல சேனாவின் அடிப்படை கொள்கையை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.
கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் கடந்த இரு வருடகால கிழக்குமாகாண ஆட்சியின்போது முற்றாக அபிவிருத்தி செயட்பாடுகளில் இருந்து முற்றாக நிராகரிக்க படுகிறார்கள் என்ற ஒரு கருத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்ன்றனர் அது முற்றிலும் உண்மைதான் ஆனால் கிழக்கு மாகணசபை முதல் அமைச்சர் பதவியை பெற்றுகொண்டு இதை நிவர்த்திசெய்து கொள்ளலாம் என்ற என்னகரு பிழையானது அதற்கான காலம் இதுவல்ல. தென்னிலங்கை பெரும்பான்மை மக்கள் கிழக்கு மாகாணசபை நகர்வுகளை நன்றாக அவதானித்து வருகின்றனர்.
ஸ்ரீ.மு.கா கிழக்கு முதல் அமைச்சர் பதவியை விட்டு கொடுப்பதனை தவிர்த்து மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்வதை தடுக்கவேண்டும்,100 நாள் வேலைத்திட்டதின் கீழ் புதிய அரசிலிருந்துகொண்டு வரலாற்று தவறு செய்வதை சற்று சிந்தித்து அரசியல் நகர்வுகளை முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கவேண்டும். இப்படியான செயற்பாடுகள் புதிய அரசின் எதிர்கால திட்டத்திற்கு ஒரு ஆரோக்கியமான விடயம்மல்ல.
தமிழ் தேசிய கூட்டமைப்பிடுக்கு கிழக்கு மாகணசபையில் மூன்று அல்லது நான்கு அமைச்சு பதவிகளை வழங்கி கிழக்கு முதல் அமைச்சர் பதவியை ஸ்ரீ.மு.கா தன்வசம் தக்கவைத்து கொள்ள வேண்டும். இதனால் கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அபிவிருத்தி வெளிச்சத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கலாம்.
ஆகவே ஸ்ரீ.மு.கா மீண்டும் ஒரு வரலாற்று தவறு செய்வதை புதிய அரசின் பொறுப்புள்ள அமைச்சர் என்றவகையில் தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நல்ல முடிவை எடுப்பார் என்பது இலங்கை பெரும்பாண்மையான முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.



Sri Lanka Rupee Exchange Rate