UNP பக்கம் தாவும் தலைகளை தடுக்க மைத்ரி வகுக்கும் வியூகம்..! ராஜித குழுவுக்கும் அழைப்பு….
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்ரியுடன் இணைந்து கொண்டு தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட ராஜித குழுவினர் த...
https://kandyskynews.blogspot.com/2015/07/unp.html
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்ரியுடன் இணைந்து கொண்டு தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து போட்டியிட ராஜித குழுவினர் தயாராவது தொடர்பான தகவல் அறிந்த ஜனாதிபதி மைத்ரி குறித்த குழுவை இன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய ராஜித குழுவினர் மற்றும் ஜனாதிபதி மைத்ரிக்கும் இடையேயான சந்திப்பு இன்று மாலை ஏழு மணிக்கு நடைபெறவுள்ளது.அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு கலாவெவ அமைப்பாளர் பதவியையும் ஹிருனிகாவுக்கு தேசிய பட்டியல் வழங்கி அவர்களை ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவாமல் இருக்க ஜனாதிபதி மைத்ரி வியூகம் வகுத்துள்ளதாகவும் இன்னும் சிலருக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்கி அவர்களை தம்முடன் இனைத்துகொள்ள அவர் யோசனை செய்துவருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ராஜித உள்ளிட்ட குழுவினர் தன்னை சந்தித்த பின்னர் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் தீர்மானத்தை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி வேண்டிக்கொண்டுள்ளதாகாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

