விமானியுடன் பலமுறை உறவு கொண்டேன் ..!! பணிப்பெண்ணின் அறிவிப்பால் அதிர்ச்சி
பிரித்தானியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் விமானி ஒருவருடன் உடலுறவு கொண்டது தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_9.html
பிரித்தானியாவை சேர்ந்த விமான பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் விமானி ஒருவருடன் உடலுறவு கொண்டது தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Hartlepool என்ற நகருக்கு அருகில் உள்ள Teesside பகுதியை சேர்ந்தவர் மேண்டி ஸ்மித்.
இளம்வயது முதல் தான் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிய வேண்டும் என்பதையே லட்சயமாக கொண்டு வளர்ந்தவர்.
இதற்கு முக்கிய காரணம் பயணிகளுக்கு தரமான சேவைகள் வழங்குவது மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும், தொழிலதிபர்களும் வரும் விமானங்களில் கிடைக்கும் சொகுசான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும் தான் அவரை விமான பணிப்பெண்ணாகவே மாற்றியது.
தற்போது 41 வயது அடைந்துள்ள மேண்டி, இங்கிலாந்தில் பிரபலமான Virgin Atlantic என்ற விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக கடந்த 10 ஆண்டுகளாக பணி புரிந்து வந்துள்ளார்.
விமானத்தில் தனக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை, பயணிகளிடமிருந்து வந்த பாலியல் தொல்லைகள், விமானத்தில் இளம்ஜோடிகளின் அத்து மீறிய பாலியல் காட்சிகளை அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட Cabin Fever என்ற புத்தகத்தில் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.
ஒரு விமான பணிப்பெண் எதற்கும் துணிந்தவர் என்பதால், தனக்கு கிடைத்த விமானி காதலனுடனான வித்தியாசமான அனுபவங்களை அப்புத்தகத்தில் எழுதியுள்ளார்.
Cessna என்ற விமானத்தில் பயணம் செய்தபோது, தன்னுடைய விமானி காதலனுடன் ‘காக் பிட்’ எனப்படும் விமானிகளின் அறையில் அவருடன் உடலுறவில் ஈடுபட்டேன்.
ஆயிரக்கணக்கான அடிகள் உயரே பறந்த விமானத்தில் நடந்த இந்த அனுபவத்தை தன் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்றும், இது போல் பல முறை நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் பணிபுரிந்த விமானத்தில் வரும் பயணிகள் தன்னிடம் அத்து மீறி நடந்தது, இரவு நேரங்களில் விளக்குகள் அனைந்த பிறகு இளம் ஜோடிகள் நிர்வாணமாக சுற்றி திரிவது உள்ளிட்ட எண்ணற்ற காட்சிகளை பல முறை கண்டுள்ளேன்.
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு பணிப்பெண்ணாக தான் அனுபவிக்காத சொகுசு வாழ்க்கையே இல்லை. தான் பணியின்போது கொண்டு செல்லும் உடுப்புகளை விட பாலியல் விவகாரங்களுக்கு தேவையான பொருட்கள் தான் தன்னுடைய பெட்டியில் நிரம்பி இருக்கும் என வெளிப்படையாக மேண்டி கூறியுள்ளார்.
இதைவிட, Virgin Atlantic விமான நிறுவனத்தின் நிறுவனரான Richard Branson உடன் உற்சாகமான பார்ட்டிகளில் கலந்துக்கொண்டது மகிழ்ச்சியான தருணங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 வருடங்களில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றிய தனக்கு எண்ணற்ற விலை மதிப்பில்லா ஆபரணங்கள், பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன என பெருமையுடன் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பணியிலிருந்து விலகியுள்ள மேண்டிGlenn என்ற விளையாட்டு வீரரை மணந்துக்கொண்டு 4 வயது குழந்தைக்கு தாயாக West Sussex நகரத்தில் வசித்து வருகிறார்.
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த காலத்தில் தனக்கு நிகழ்ந்த சம்பவங்கள், சொகுசு வாழ்க்கை, தகாத உறவுகள் உள்ளிட்ட அனுபவங்களை வெளிப்படையாக புத்தகத்தில் பகிர்ந்துள்ளது இங்கிலாந்து நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

