பேஸ்புக்கில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை நிர்வாணப்படுத்திய மாணவன் ;அம்பலாங்கொட வில் சம்பவம்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் படங்களை குழந்தையின் நிர்வாணப் படத்துடன் ஒன்றிணைத்து முகநூலில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_712.html
ஐந்து லட்சம் ரூபா இரண்டு சரீர பிணையில் மாணவனை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பெல்பிட்டிய நேற்று (23) உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் (மாணவன்) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அம்பலாங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட உயர் தரத்தில் பயின்றுவரும் மாணவனே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வேறு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் படங்களைப் பயன்படுத்தி நிர்வாணமான குழந்தைகளின் படங்களை எடுத்து குழந்தைகளின் தலைகளுக்குப் பதிலாக ஜனாதிபதி, பிரதமர், எம்.பி.க்களின் படங்களை இணைத்து முகநூலில் குறித்த மாணவன் வெளியிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளார்களா என்பதை ஆராய்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி நீதிமன்றில் அறிக்கையிடுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

