ஜனாதிபதியினால் பல குண்டு வீசப்பட்டன: செனவிரத்ன

தற்போதைய அரசாங்கம் எத்தனோல் மற்றும் போதை பொருள்கள் மாத்திரமே நாட்டின் பிரதான பிரச்சினையாக கருதுகின்றதென முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாரா...


தற்போதைய அரசாங்கம் எத்தனோல் மற்றும் போதை பொருள்கள் மாத்திரமே நாட்டின் பிரதான பிரச்சினையாக கருதுகின்றதென முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பல்மடுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டப்ல்யூ.டி.ஜே. செனவிரத்ன,
இம்முறை பொது தேர்தலில் பொது தேர்தலில் பொது மக்களின் தொடர் கோரிக்கைகள் மஹிந்த ராஜபக்சவிடம் கிடைத்தது. அதனால் தான் மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் எங்களுக்காக இருக்கின்றார்கள் என்று நம்பிக்கையில் இருந்தோம்.
எனினும் சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேவயற்ற முட்டாள்தனமான உரையை ஆற்றினார். இது எங்கள் பயனத்தை இடை நிறுத்த போடப்பட்ட குண்டு.
இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு அனுகூலமான நிலை உருவாகியது. எனினும் இந்நாட்டு மக்களிடம் நான் கூறவேண்டியது ஒன்றாதான், ஏமாற வேண்டாம்.

இம்முறை முழு நாட்டிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி பெரிய அளவிலான வெற்றியை பெற்றுக்கொள்ளும்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நாடாளுமன்றத்திற்கு செல்லும் 11 பேரில் 7 பேர் கூட்டணியில் இருந்து செல்வதற்கு பெரிய வெற்றியினை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
2015ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலும் உறுப்பினர்களுக்கு இதுவரையில் ஒரு சதம் பணம் வழங்கவில்லை. 100 லட்சம் வழங்குவதாக கூறியது மாத்திரமே.
அதனால் அபிவிருத்திகள் தடைப்பட்டுள்ளது. மஹிந்தவுக்கு போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்க மாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்தார்.
இது எங்களுக்கு பிரச்சினையாகியது. ஐக்கிய தேசிய கட்சியின் அழுத்தங்களினாலே இவ்வாறு நடந்தன.
பின்னர் விருப்பமின்றி மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கியதாக கூறி ஜனாதிபதி இன்னும் ஒரு குண்டு போட்டார்.
எனினும் நாங்கள் இணைந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியே மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு பெற்றுக்கொடுத்தோம்.
மஹிந்தவினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசியமற்ற உரையை ஆற்றினார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 2293409143352976085

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item