ஏனைய இனத்தவர்களுடன் முரண்பட்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் மு.காவிற்கில்லை: ஹக்கீம்

ஏனைய இனத்தவர்களோடு முரண்பட்டுக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்க்கு இல்லை என அக்கட்சியின் தலைவரும் அமைச்ச...


ஏனைய இனத்தவர்களோடு முரண்பட்டுக்கொண்டு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்க்கு இல்லை என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை கட்டியெழுப்பும் வகையில் இணக்க அரசியலையே மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மக்களையும் அரவணைத்துக் கொண்டு உரிமைகளுக்காகப் போராடுவதே எமது நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த திங்கட்கிழமை அப்பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

"இடம்பெயர்ந்த வாக்காளர்களில் அநேகர் தமது சொந்த ஊர்களில் பதிவதற்கு கட்டுபாடுகள் இருந்த காரணத்தினால் புத்தளம் மாவட்டத்தில் தங்களது பெயர்களை பதிந்து விட்டனர். பலர் விரக்கியோடு விலகி இருந்துவிட்டார்கள். இவ்வாறான காரணங்களிகனால் வன்னியில் கணிசமான வாக்கார்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாது மிகவும் துரதிரஷ்டமானது.

எமது கட்சியை கருவறுக்க முற்பட்டுள்ளவர் இருக்கின்ற வன்னி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சிப் பட்டியலில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் இடம்பெறுவதை கட்சிப் போராளிகள் ஜீரணித்துக்கொள்ளமாட்டார்கள். எனவே நாம் வன்னியில் தனித்துப் போட்டியிட முன்வந்தோம். எந்தக் காரணம் கொண்டும் அந்த ஆசாமி இருக்கின்ற பட்டியலில் எமது வேட்பாளர்களின் பெயர் இடம்பெற்றுவிடக் கூடாதென்பதில் எமது போராளிகள் முனைப்பாக இருந்தார்கள்.

முஸ்லிம் காங்கிரஸிக்கு முதலில் 1989ஆம் ஆண்டில் வன்னியில் ஆசனம் கிடைத்ததோடு நீண்ட காலமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்து வந்திருக்கின்றது. ஆகக்கூடினால் 15 ஆயிரம் வாக்ககளை தன்னிடம் வைத்துக் கொண்டு அதைவிட பல மடங்கு அதிகமான வாக்கு வங்கியை கொண்டுள்ள முஸ்லிம் காங்கிரஸின் மீது அட்டூழியங்களையும், அட்டகாசங்களையும் கட்டவிழ்த்து விட்டு வன்னி ஆசாமி படுத்தகின்றபாடு சொல்லி மாளாது.

பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை 5 வீத வெட்டுப் புள்ளியை எட்டுவதற்கு 15 ஆயிரம் வாக்ககளையாவது எமது கட்சி பெற வேண்டும் என்ற அச்சமும் சிலரிடம் காணப்பட்டது. வன்னிக்கு ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றெடுங்கள். அல்லாவிட்டால் கட்சியின் கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமுடியுமானால் ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் வழங்கி கௌரவிக்கும்.

வன்னி மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சுத்தமான, கலப்பற்ற வாக்கு வங்கியை நம்பி எமது வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் குதித்திருக்கிறார்கள். மரச் சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் இந்தப் போராட்டத்தில் இணைந்திருக்கிறார்கள். கட்சியின் கீதங்கள் இசைக்கப்படுகின்ற போதெல்லாம் அவை கட்சிப் போராளிகளுக்கு ஒரு விதமான உந்துதலையம், உற்சாகத்தைம் ஊட்டுகின்றது.

சந்தேகங்களைக் கலைந்து உறுதியாக ஓர் ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்த தேர்தல் மாவட்டத்தில் வாழும் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸின் பிந்திய போராட்டமாக இருந்தது 20ஆவது அரசியலமைப்புத் தேர்தல் திருத்தமாகும். அமைச்சரவையில் முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஆபத்தான திருத்தத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்ததன் மூலம் ஜனாதிபதியே அதிர்ந்து போய்விட்டார்.

நான் தெளிவாக ஜனாதிபதியிடம் சொன்னேன். இரண்டு, மூன்று மாதங்களாக அதனை நான் கர்ணகடூரமாக எதிர்த்து வந்தேன். ஜனாதிபதியின் கட்சித் தலைமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் தேர்தல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அமைச்சர்களான ராஜிதவும், சம்பிக்கவும் ஜனாதிபதியிடம் சொல்லியுள்ளனர்.

உங்களது தேவைக்காக தேர்தல் சட்டத்தை மாற்ற முடியாது. அது எல்லா சமூகங்களுக்கும் நியாயமானதாக இருக்க வேண்டுமென்று நான் ஜனாதிபதியிடம் வாதாடினேன். தனது அதிகாரங்களைக் குறைப்பதற்கு 19ஆவது திருத்தத்தின் மூலம் வழிகோலிய ஜனாதிபதி மைத்திரிபாலää அநியாயமான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்ற இடமளிக்கக்கூடாது என்று நான் கூறினேன்.

சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி பேசிய பேச்சால் மஹிந்த ராஜபக்ஷவின் பலூன் காற்று இறங்கிப் போய்விட்டது. புஸ்வாணமாகிப் போகும் அரசியலாக அவரது அரசியல் மாறிவிட்டது. பலமான, உறுதியான அரசாங்கம் அமைகின்ற போது அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பத்துக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுகின்ற போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வன்னியின் பாராளுமன்றப் பிரதிநிதியையும் கையோடு அழைத்துக் கொண்டு செல்வார்.

தனது சுயநல அரசியலுக்கு குறுக்கே நிற்பவர்களை பழிவாங்குவதும், இடமாற்றம் செய்வதும், பதவி நீக்கம் செய்வதும் வன்னி மக்களை பெரிதும் பாதித்திருக்கின்றது. பாதைகளின் ஒழுங்கமைப்பு, வீடமைப்பத்திட்டத்தில் உரிய பகிர்வு, வேலைவாய்ப்பு என்பன போன்ற பிரச்சினைகள் வன்னி வாழ் முஸ்லிம்களின் இன்றைய அவசியத் தேவையாகும் என்பதனால் இயன்றவரை விரைவில் அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அரசியல் பலத்தினூடாகத்தான் இவற்றை நாம் அடைய முடியும். அதனால் உங்கள் வாக்குகளை வழங்கி கட்சியை மேலும் வலிமையுள்ளதாக ஆக்கங்கள்” என்றார்.

இக்கூட்டங்களில் வன்னி மாவட்டப் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முதன்மை வேட்பாளருமான முத்தலிப்பாவா பாறூக், வட மாகண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் உட்பட கட்சியின் வேட்பாளர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Related

தலைப்பு செய்தி 7708541551681359978

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item