இலங்கை கடற்பரப்பில் இருக்கும் jelly fish தொடுகையால் உயிராபத்து ஏற்படாது
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் இருக்கும் jelly fish தொடுகையால் உயிராபத்து ஏற்படாது என தேசிய விஷ தகவல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1980...
https://kandyskynews.blogspot.com/2015/06/jelly-fish.html
இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் இருக்கும் jelly fish தொடுகையால் உயிராபத்து ஏற்படாது என தேசிய விஷ தகவல் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
1980களில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக டொக்டர் வருண குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் இருக்கும் jelly fish தொடுகையால் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என தேசிய விஷ தகவல் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் jelly fish தொடுகையால் அதிக வலி மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் மத்திய நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாக முதலுதவிகளை வழங்குவதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

