மைத்திரி – மஹிந்த அணியினரிடையே பிளவு பூதாகாரமாகியுள்ளது!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரே கட்சிய...

keerthi_tennakoon
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஒரே கட்சியைச் சேர்ந்த தரப்பினர் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி கொள்கின்றனர் என கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ச தரப்பாகவும், மைத்திரிபால சிறிசேன தரப்பாகவும் இரண்டு குழுக்களாக பிரசாரம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, முகநூலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மல்சா குமாரதுங்க, மஹிந்த சமரசிங்க, ஜனக பண்டார தென்னக்கோன், துமிந்த திஸாநாயக்க, சாந்த பண்டார, திலங்க சுமதிபால, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, விஜித விஜயமுனி டி சொய்சா உள்ளிட்ட சில நபர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என முகநூலில் அதே கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு தரப்பினர் கோரி வருகின்ற நிலைமை காணப்படுகின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுவாக விருப்பு வாக்கு முறைமையில் ஒரே கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இடையில் விருப்பு வாக்குப் போட்டி காணப்பட்ட போதிலும், இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் இந்த நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 8390698109380028025

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item